வாகன ஓட்டிகளே உஷார்!! நாளை மறுநாள் முதல் இது கட்டாயம்!!
வாகன ஓட்டிகளே உஷார்!! நாளை மறுநாள் முதல் இது கட்டாயம்!!
மே 23-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுவோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், மே 23ம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான கால பகுதியில் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.
எனவே, விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், வரும் 23-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் இருக்கும் நபரும் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.