வாசுதேவநல்லூரில் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அக்கினிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கை கணேசன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமநாதபுரம் பஞ்சாயத்து தலைவருமான வழக்கறிஞர் மகேந்திரா வரவேற்றார். மாவட்ட தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட ஓபிசி அணித்தலைவர் திருஞானம், புளிங்குடி நகர தலைவர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பேரூர் தலைவர்கள் சிவகிரி வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ராயகிரி காளியப்பன், வாசுதேவநல்லூர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், மாநில பேச்சாளர் பால்துரை, புளியங்குடி நகராட்சி கவுன்சிலர் சண்முகசுந்தரம், பேச்சாளர் சோலை இராமசாமி, தேவிபட்டணம் சுதாகர், ராஜேந்திரன், ரத்தினபுரி மேனகா, சாகுல் ஹமீது, ராமநாதபுரம் நிர்வாகிகள் மாரியப்பன், சித்திரைக்கனி, மேட்டுப்பட்டி சரவணகுமார், லட்சுமணன், கூடலூர் திருப்பதி, பூலோக பாண்டியன் மற்றும் கிராம கமிட்டி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுதப்பட்டன கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேசியதாவது, இந்தியாவை ஆளும் மோடி அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஆண்டுக்கு 15 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொன்னார்கள் அதனை நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக வங்கி கடன் கொடுக்கப் பட்டு அதன்மூலம் ஏராளமான மாணவர்கள் படித்தார்கள்.
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டமானது இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கை இல்லாமல் செய்யும் மோசடி வேலையாகும். இந்தத் திட்டத்தை ஆட்சி மாற்றிப் அமைக்க வேண்டும். இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பினை கொடுக்கப்படவேண்டும் இவ்வாறு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேசினார்.