வாரிசு அரசியலை பற்றி பேச வரலாறு தெரியாத சிவி. ஷண்முகத்திற்கு அருகதை இல்லை. அமைச்சர் பொனாமுடி காரசார விமர்சனம்.
செய்தியாளர் செங்கை ஷங்கர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் 100வது பிறந்தநாளை முன்னிட்டு,
செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையிலும் செங்கல்பட்டு நகர செயலாளர் ச.நரேந்திரன் வரவேற்பிலும் தலைமை பொதுக்குழு உறுப்பினரும் செங்கல்பட்டு நகர்மன்ற துணை தலைவருமான அன்புச்செல்வன், நகர்மன்ற தலைவர்கள் மற்றும் நகர செயலாளர்களுமான ஜெ.ஷண்முகம், எம்.கே.டி கார்த்திக் தண்டபாணி மற்றும் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ஆகியோர் முன்னிலையிலும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது உதயநிதி அமைச்சரானதற்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்த சி.வி சண்முகம் பேச்சுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்திருக் கிறார்களா? அவர்களுக்கு பதவி வழங்கப் பட்டிருக்கிறதா என சிவி ஷண்முகம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சிவி சண்முகத்திற்கு அதிமுக வரலாறு தெரியவில்லை, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உயிரிழந்தவுடன் அவருடைய துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சராக பதவி வகித்தார். ஜானகி முதல்வராக வந்தவுடன். நான்தான் எம்ஜிஆரின் உண்மையான வாரிசு என ஜெயலலிதா கூறினார். அந்த வாரிசு உரிமை எப்படி என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன் என சிரித்துக் கொண்டே சூசகமாக பேசினார்.
வாரிசு அரசியல் பற்றி பேசுவதற்கு அதிமுக வரலாறு தெரியாத உனக்கு என்ன தகுதி இருக்கிறது உனக்கு தில்லு இருந்தால் ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்கள் மீது அளவுகடந்த அக்கறை இருந்ததாலும்
அவருக்கு அனைத்து விளையாட்டுகளும் தெரியும் என்பதாலும்தான் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை முதல்வர் அளித்துள்ளார். இதுதான் திராவிட மாடல் அரசு எனவும் பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் து.மூர்த்தி, செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், துணை தலைவர்கள் வழக்கறிஞர் ஜி.கே. லோகநாதன், சித்ரா கமலக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் அருள்தேவி, திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.