BREAKING NEWS

வாழப்பாடியில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான கல்லறை திருவிழா இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் அஞ்சலி செலுத்த ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

வாழப்பாடியில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான கல்லறை திருவிழா இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் அஞ்சலி செலுத்த ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

 

சேலம் மாவட்டம்,

வாழப்பாடியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் இதில் இறந்து போன முன்னோர்களை நினைவு கூறும் வகையில் வாழப்பாடி பங்கு தந்தை ஜெயசீலன் அவர்கள் கல்லறை தோட்டங்களை மந்திரித்து திருப்பலி நிறைவேற்றினார்.

 

  உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ம் தேதியன்று இறந்தவர்கள் நினைவு நாளை கல்லறை திருவிழாவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறார்கள். இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அவரது கல்லறைகளில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

 

வழக்கம்போல் இந்த ஆண்டும் இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இன்று அனைத்து  கிறிஸ்தவ கல்லறைத் தோட்டங்களில் இருக்கும் புல், பூண்டுகளை வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும்.

 

 

பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு இறந்தவர்களுக்கு பிடித்த உணவு சமைத்து வைத்து அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆன்மாக்கள் நித்திய இளைப்பாறுதல் பெற சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம்.

 

அதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )