விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூபாய் 29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு பாபநாசம் யானை பாலம் அருகே பூமி பூஜை செய்யப்பட்டது. அரூர் 20 திட்டத்தின் மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
பூமி பூஜை நடந்த பின்னர் நகர அதிமுக செயலாளர் கண்ணன் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல் இமாகுலேட், சுடலைமாடன், வைகுண்ட லட்சுமி, வக்கீல் ஸ்டாலின், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி சுந்தரம், மற்றும் சிலர் இவ்வளவு பெரிய மத்திய மாநில அரசு குடிநீர திட்டபணி தொடக்க விழாவுக்கு,
எம்எல்ஏ இசக்கி சுப்பையா வுக்கு தகவல் தெரிவிக்காததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து ஆணையர் கண்மனி யிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்களிடம் இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.