விசிக தலைவர் தொல்.திருமா அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து விருத்தாசலம் விசிக சார்பில் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடலூர் மாவட்ட விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வருவதை கண்டித்து..
அவரது உருவ பொம்மையை விடுதலை சிறுத்தை கட்சி முற்போக்கு மாணவர் அணி மாநில துணை செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் உருவமையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை எச்சரிக்கை விசிகவின் எச்சரிக்கை! அண்ணாமலையே அரவேக்காடே மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதில் அண்ணாமலையின் உருவப்படத்தை எரிக்கும் போது போலீசாருக்கும் விசிகாவினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பூக்கடை ரவி, ஊடகம் மைய மாநில துணை செயலாளர் ராஜ்குமார், விருத்தாசலம் நகர பொருளாளர்கள் மேட்டு காலனி முருகன், பூந்தோட்டம் தனசேகர், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் வீரமணி, மேட்டு காலனி கர்ணன்,
மேட்டு காலனி அர்ஜுனன், விஜயகுமார், பூந்தோட்டம் ரமணா, மணிபாரதி, தமிழ்ச்செல்வன், சஞ்சய், பரணி, முகிலன், தன்ராஜ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.