BREAKING NEWS

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தமிழீழ தேச விடுதலைக்கு போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுசரிப்பு.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தமிழீழ தேச விடுதலைக்கு போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாளாக அனுசரிப்பு.

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் குடந்தையில் தமிழீழ தேச விடுதலைக்கு சமற்களத்தில் நின்று போராடி வீர மரணமடைந்த போராளிகளை நினைவு கூறும் வகையில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன் கர்னல் சங்கர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட நாளை மாவீரர் நாளாக அனுசரிக்கப்பட்டுகிறது.

 

இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு மெழுகுத்திரியேந்தி மேதகு தலைவர் பிரபாகரன்,புதல்வன் பாலச்சந்திரன், உவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன் உரையாற்றும் போது:-

 

தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.2009 முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரம் பேர்கள் உட்பட ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்.காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இலங்கை அரசு சொல்லவில்லை.

சர்வதேச போர் விதிகளை மீறி செயல்பட்ட ராஜபக்சே,கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டவர்ககளை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுவதையும்,தமிழர் நிலங்களை பிடுங்கி சுற்றுலாத் தலமாக மாற்றி வரும் போக்கை இலங்கை அரசு கைசிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

 

இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தை.சேகர்,மாநில துணைப்பொதுச்செயலாளர் தளபதி சுரேசு, மாநில செயற்குழு உறுப்பினர் ரா.அமானுல்லா, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சாக்கோட்டை ராஜா, மயிலாடுதுறை மாவட்டசெயலாளர் மணிகண்டன், தஞ்சை வடக்கு மாவட்ட பொருலாளர் மகேந்திரன்,

 

மாவட்டதுணை செயலாளர் செள.குபேந்திரன், குடந்தை மாநகர பொருலாளர் அலெக்ஸ், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ம.வில்லியம், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை பிரபு,குடந்தை வடக்கு ஒன்றிய இளந்தமிழ்ப் புலிகள் பாசறை அமைப்பாளர் மு.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )