விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம் மாவட்டம்,
வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்காடு ஏரி தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்.,
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு இயற்கையின் அருட்கொடை எனலாம். தற்போது வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலை முழுவதும் பகலில் பனி படர்ந்து காணப்படுகிறது. குளிர்ச்சியான, இதமான சூழல் நிலவுவதால் ஏற்காட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையையொட்டி வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் காலை முதல் கார்கள், வேன், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் ஏற்காடு மலை பாதையில் அணிவகுத்து சென்றது. மலை பாதையில் பனி மூட்டம் படர்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மலை பாதையில் மெல்ல ஓட்டினர்.