விபத்தில் சிக்கிய மூவரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
நேற்று இரவு 8.15மணிக்கு தனியார் தங்கும் விடுதியில் பணிமுடிந்து ஏலகிரி மலையில் இருந்து ஒரு இளைஞர் மற்றும் இரு பெண்கள் வீட்டிற்கு செல்லும்போது,
அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஜோலார்பேட்டை ரெட்டியூர் அருகில் திருப்பத்தூரில் இருந்து ஆம்பூர் வரை சென்ற அரசு பேருந்து மீது மோதியதில் மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இந்நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் B.V.Sc அவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு முதலுதவி அளித்து பத்திரமாக ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
மேலும் இச்சம்பவத்தை முழுமையாக விசாரிக்கும்படி உத்தரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் துரித நடவடிக்கையை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
CATEGORIES திருப்பத்தூர்