BREAKING NEWS

வியாபாரிகளுக்குள் தகராறு: உழவர் சந்தையில் பரபரப்பு.

வியாபாரிகளுக்குள் தகராறு: உழவர் சந்தையில் பரபரப்பு.

உடுமலை உழவர் சந்தை வியாபாரிகளின் பிடியில் சிக்கி தவித்து வருவதாக புகார்கள் உள்ளது.
இந்நிலையில் உழவர் சந்தைக்குள் கடை போடுவதில் இரு வியாபாரிகளுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஒரு நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்து விடுமோ என அச்சம் எழுந்தது.


உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இதனால் தொந்தரவுகள் ஏற்பட்டது.
உழவர் சந்தையில் கடை போடுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
ஆனால் இதை எதையும் நிர்வாகம் மதிப்பில்லை. காய்கறி விலைகளும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட தாறுமாறாக அன்றாடம் ஏற்றி வைத்து விற்கப் படுவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர்புடைய துறை இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )