BREAKING NEWS

விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.

விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோ யூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.

 

ஒரு உரு மூடைக்கு ஒரு நனோ யூரியா பாட்டில் வாங்கினால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்ப் படும் ஏன் என்றால் ஒரு ஏக்கருக்கு 10-டேங் பவர் ஸ்பிரேயர் வைத்து தெளிக்கவேண்டும்.

 

ஒரு டேங்குக்கு 50 ரூபாய் வாடகை 10டாங்க் அடிப்பதற்க்கு வாடகை 500 ரூபாய் தண்ணீர் எடுப்பதற்க்கு கூலி ஆள் சம்பளம் எல்லாம் பார்த்தால் விவசாயமே வேண்டாம் என்று ஒதுங்கு பவர்கள் தான் அதிகம்.

 

ஒரு மூட்டை யூரியாவை ஒரு ஏக்கரில் ஒரு மணி நேரத்தில் விதைத்து விடலாம் ஒரு வேலையாள் சாதரனமாக ஏழு ஏக்கர் ஜவரை யூரியாவை விதைத்து விடு வார் இது தான் விவசாயிகளுக்கு நஷ்டமில்லாமல் இருக்கும் இதை விட்டுவிட்டு நனோ யூரியாவை தெளியுங்கள் என்றால் ஏக்கர் ஒன்றுக்கு 1200 செலவு குறைந்தபட்சம்       

 

10ஏக்கருக்கு 12000. ரூபாய் செலவு வருகிறது. மேற்ப்படி யூரியா 10 மூடைகள் 10-ஏக்கரில் செலவு கூலி உட்ப்பட 4000 ரூபாய் தான் செலவு ஆகிறது.           

 

 இந்த மூட்டை யூரியாவில் உள்ளசத்து நனோயூரியாவில் கிடையாது விவசாயிகளுக்கு அதிகப்படியான செலவு தான் நனோ யூரியாவால்  அதிகப்படியான லாபம் யாருக்கு உரநிறுவனங்களுக்கு தான் விவசாயிகளுக்கு கிடையாது.

 

நனோ யூரியாவை விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி கொடுக்வேண்டாம் விவசாயிகள் கேட்க்கும் உரங்களை மட்டும்வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )