BREAKING NEWS

விருதாச்சலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், ஜமீன்தாரின் சீர்வரிசையுடன் ஆடம்பர, தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

விருதாச்சலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், ஜமீன்தாரின் சீர்வரிசையுடன் ஆடம்பர, தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

செய்தியாளர் A.சதீஷ் விருதாச்சலம்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோனாங்குப்பம் கிராமத்தில், புனித பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக ஜமீன் குடும்பத்தை சேர்ந்த, வீரசேகர முத்துகிருஷ்ண பொன்னம்பல கணேஷ் கச்சராயர், குதிரையுடன் கூடிய சாரட் வண்டியில், ராஜ உடை அணிந்து கொண்டு, பெரியநாயகி அன்னைக்கு சீர்வரிசை எடுத்து வந்தார்.

பின்னர் தமிழ் கலாச்சாரப்படி பெரிய நாயகி அன்னை, புடவை அணிவித்த பின்பு வானவேடிக்கையுடன், மின்னொளியால், அலங்கரிக்கப்பட்ட, தேரினை, ஜமீன்தார் தொடங்கி வைத்த, பின்பு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், வேண்டுதலை நிறைவேற்றியதற்கும், உப்புக்களை அன்னை மீது வீசி வேண்டிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் உட்பட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS