விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் மதவெறி சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் எனும் முழக்கத்தோடு மனித சங்கிலி இயக்கம் ராஜபாளையம் காந்தி சிலை முதல் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரங்கசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி மதிமுக மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சரவணன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் திருப்பதி ஆகியோர் தலைமை தாங்கினார்.
மேலும் மனித சங்கிலி இயக்கத்தில் ஐந்திணை மக்கள் கட்சி தேவதாஸ் தமிழ் புலிகள் கட்சி நகரச் செயலாளர் பாண்டியராஜன் மக்கள் அதிகாரம் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் நகர தலைவர் சங்கர் கணேஷ் மதிமுக நகர செயலாளர் மதியழகன் சிபிஎம் நகர செயலாளர் மாரியப்பன் சிபிஐ நகரச் செயலாளர் விஜயன், விசிக ஒன்றிய செயலாளர் முத்துக்கந்தன், ஐஎன் டியூசி பிரபாகரன்,
ஏ ஐடியூசி முத்துமாரி, சி ஐ டி யு கணேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் மாணவர் சங்கம் வாலிபர் சங்கம் மாதர் சங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவரும் பங்கேற்றனர்.