BREAKING NEWS

விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !

விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !

திருத்தங்கல்லில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருத்தங்கல் தேவர் மஹாலில் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில்விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .மாவட்ட பொருளாளர் ஆனந்தராஜ் , முத்துக்குமார் ,கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

வெள்ளைத் துரை பாண்டியன் வரவேற்புரை வழங்கினார்.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தேவரின கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்பிஎம் அழகர்சாமி , அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்து ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர் ..கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் மற்றும் கிராமங்களில் தேவர் பேரவை கொடியேற்றி கிளைகளை புதுப்பிப்பது என்றும்,

எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சமூகநீதி மாநாட்டில் சுமார் 2000 பேர் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது ..கூட்டத்தில் முடியனூர் தென்னரசு , வெம்பக்கோட்டை ராஜேந்திரன் ,விருதுநகர் பெரியசாமி தேவர் ,அருப்புக்கோட்டை முருகன் ,சத்திர ரெட்டியபட்டி ராஜேந்திரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர் ..நகர அமைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )