BREAKING NEWS

விருத்தாசலத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாணவர்கள்சங்கம் இணைந்து ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

 மேலும் ஆர்ப்பாட்டத்தில் எங்களின் தாய் மொழியாக விளங்கும் தமிழ் மொழியை சிறுக சிறுக மறைத்துவிட்டு இந்தியைத் திணித்து கொண்டு வருகின்ற ஒன்றிய அரசே இந்தி திணிப்பை கைவிடு இல்லை என்றால்,..

 

 

தமிழ் நாடு முழுவதும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். என கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 

இதற்கு விருத்தாச்சலம் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஒன்றிய தலைவர் ரமேஷ், கண்டன உரை விருதை ஒன்றிய செயலாளர் பரமசிவம், பங்கேற்பு மாவட்ட தலைவர் சின்னதம்பி,

 

 

மாவட்ட செயலாளர் சிவ நாத், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் வீரா, வேப்பூர் ஒன்றிய செயலாளர் கனக செல்வம், மற்றும் கலைச்செல்வன், முருகவேல், செல்வகுமார்,செந்தில், நெல்சன் போன்ற கட்சி நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    Srikanth 2 years

    👍supre news

  • Disqus (0 )