BREAKING NEWS

விருத்தாச்சலம் அடுத்துள்ள ஆலடி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம்.

விருத்தாச்சலம் அடுத்துள்ள ஆலடி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

 

 

இந்நிகழ்ச்சியில் மாத்தூர் மருத்துவர் ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார், ஆலடி ஊராட்சி மன்ற தலைவர் திரிபுலா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மேலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயசித்ரா மாரிமுத்து முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் சாமி ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து முகாம் திட்ட வட்டார மருத்துவர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ஒன்றிய பெருந்தலைவர் மலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, மகளிர் திட்ட வாசா செவிலியர் நிர்மலா,

 

 

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்தமிழ் செல்வி, ஆய்வாளர்கள் கார்த்திக் ,முருகவேல், வீரமணி, முருகன், முல்லைநாதன், சுகாதார செவிலியர் தேன் அம்மன் தேவி, சுகாதார மேற்பார்வையாளர் செல்லதுரை, பள்ளி தலைமையாசிரியர் கிளறா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

 

 

முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, இசிஜி இருதய பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் பரிசோதனை, இருதநோய் பரிசோதனை, கர்ப்பப்பை பரிசோதனை, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் பரிசோதனை,

 

குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை, காது மூக்கு தொண்டை பரிசோதனை, மக்களை தேடி மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் பரிசோதனை, தோல் நோய் சிகிச்சை, தொற்று மற்றும் தொற்றா நோய் சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டது.

 

 

இம்முகாமில் ஆலடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )