BREAKING NEWS

விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.

விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் விருத்தாச்சலம் – சேந்தநாடு நெடுஞ்சாலையில் முத்தனகுப்பம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

 

இதில் முத்தனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் வயது 40 என்பவர் காலை 9:30 மணி அளவில் மது அருந்திவிட்டு அவரது ஊரை நோக்கி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார்.

 

 

அதே சமயத்தில் மட்டி கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் வயது20 இவர் இருசக்கர வாகனத்தில் ஓட்டிக்கொண்டு கல்லூரி சென்றுள்ளார்.

 

எதிரே வந்த லட்சுமணன் மதுபோதையில் அதிவேகத்தில் வந்து விஜயின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதினார். இதனால் பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

 

இதில் இருவரும் வாகனமும் சுக்குநூறாக நொறுங்கியது தகவல் அறிந்து வந்த இருவீட்டாரின் உறவினர்கள் கடும் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டனர்.  

 

இதனை அறிந்த ஆலடி காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )