BREAKING NEWS

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியதில் தாயின் கண் முன்னே 4 வயது சிறுமி உயிரிழந்தன இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

 

விருத்தாச்சலம் அடுத்துள்ள வண்ணான் குடிக்காடு கிராமத்தில் நீலகண்டன் சங்கரி என்ற தம்பதியின் மகள் சம்யுக்தா என்ற சிறுமி தாயுடன் வீட்டின் அருகே நடந்து கொண்டிருக்கும் போது அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு அதிமுக தொண்டர்களை ஏற்றுக்கொண்டு அதிவேகமாக வந்த டாட்டா ஏசி வாகனம் சிறுமி மீது பலமாக மோதியது.அப்போது சிறுமி சம்யுக்தா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சம்யுக்தா பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

அதனைத் தொடர்ந்து நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்துவிட்டு குழந்தையின் சடலத்தை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். குழந்தையின் இறப்பிற்கு உரிய காரணமான டாட்டா ஏசி வண்டியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரேதத்தை ஊர் பொதுமக்கள் நெடுஞ்சாலைக்கு தூக்கி வந்து கொண்டிருக்கும் போதே காவல்துறையினர் மரித்து கீழே இறக்குங்கள் என கூறினார்கள். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூலர் பாக்ஸில் இருந்த பிரேதத்தை இறக்கி வைத்துவிட்டு புறவழி சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 

 

அப்போது தகவல் அறிந்து வந்த விருத்தாச்சலம் காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கீத் ஜெயின் தலைமையிலான கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதான பேச்சு வார்த்தை செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

 

பின்பு ஊரில் முக்கிய ஒருவர் காவல் துறையினரிடம் வழக்கு ஒன்று எழுதிக் கொடுங்கள் என்று கூறியுள்ளனர் அதன் அடிப்படையில் ஊரில் முக்கியவர் ஒருவரிடம் வழக்கை எழுதிக் கொடுத்துள்ளனர் பின்பு பிரேதத்தை தூக்கிச் சென்று அடக்கம் செய்துள்ளனர் உறவினர்கள். மேலும் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட போது அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை காணப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )