BREAKING NEWS

விருத்தாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டை சுத்தியுள்ள பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

விருத்தாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டை சுத்தியுள்ள பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் கொடியேற்று விழா..

 

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம் ஆர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விருதாச்சலம் தொகுதியில் அழிச்சிகுடி சின்னகண்டியாகுப்பம் கச்சரானத்தம் பள்ளிப்பட்டு பவழங்குடி மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் இன்று பல்வேறு இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது.

 

மேலும் இதன் மூலம் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை பல்வேறு பகுதியில் கொடியேற்றி வைத்த பின்பு இன்று விருதாச்சலம் அருகே மங்கலம்பேட்டையில் செய்தியாளிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸ் கட்சியின் கொடிகள் ஒவ்வொரு பூத்தாக மாநில முழுவதும் ஏற்ற வேண்டும் என்றும் குறிப்பாக தற்போது தமிழகத்தில் முன்பு தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 100 பூத் வாரியாக கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.

 

இரண்டாவது முறையாக இன்று விருதாச்சலத்தில் 100 பூத் வாரியாக காங்கிரஸ் கோடிகள் ஏற்றப்பட வேண்டும் என்று தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் கொடிகள் ஏற்றியதாகவும் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் வருகிற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் மேலும் தங்கள் கட்சி உட் கட்சி பிரச்சினையில் தலைமை எடுத்த முடிவுகளுக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

 

மேலும் தமிழக மற்றும் கேரளாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் குறித்து கேள்வி கேட்டதற்கு அது வன்முறையாக கண்டிக்கத்தக்கது என்றும் அது ஒருபோதும் காங்கிரஸ் கட்சி விரும்பாது என்றும் தெரிவித்தார்.

 

ஆன்லைன் ரம்மி விஷயத்தில் தமிழக ஆளுநர் சட்டத்தை புறக்கணித்த தொடர்பாக கூறுகையில் செய்தியாளரின் கேள்விக்குறியில் ஆன்லைன் சட்டத்தை கவர்னர் ஆளுநர் அவர்கள் ஆர் எஸ் எஸ் தலைவராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார் மேலும் கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இடைப்படு வழங்க எப்போதும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

 

மேலும் தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சீர்காழி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இடைப்பீடு தமிழக அரசு வழங்கும் அதற்கும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

 

உடன் செய்தியாளர் சந்திப்பில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவரும் விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம் ஆர் ராதாகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் ராஜன் விருதாச்சலம் நகர செயலாளர் ரஞ்சித் மற்றும் முன்னாள் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நகர் பெரியசாமி கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )