BREAKING NEWS

விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிக்கை பாலாம்பிகை உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் சனிப் பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிக்கை பாலாம்பிகை உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் சனிப் பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விருதாம்பிக்கை பழமலைநாதர் உடனுறை பாலாம்பிகை ஆலயத்தில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருவிலுள்ள ஸ்ரீ நந்தி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பால் அபிஷேகம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், சந்தனம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று,..

 

அருகம்புல் மலர் மாலை அணிவித்து பலவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் விளங்க மகாதீபாரனை காட்டப்பட்டது.

 

இந்த சனிப்பிரதோஷத்தை கண்டு கொள்வதற்கு பல மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் என்றும் சனிப்பிரதோஷத்தில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் நன்மை அடைகிறார்கள் என பிரதோஷத்தில் கூறப்படுகிறது.

 

 ஆகையால் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தீஸ்வரனின் அருளை பெற்றனர். பக்தர்களுக்கு விருத்தாச்சலம் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )