விலைவாசி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தஞ்சை கீழவாசலில பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவரும், தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினருமான ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்ப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளர் வினாயகம், மாவட்ட மருத்துவர் அணி பாரதிமோகன், வழக்கறிஞர் சந்திரபோஸ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் நெப்போலியன் சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் தஞ்சை ரெயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாநகர தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாஜகபாரதிய ஜனதா கட்சி