விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி, ஜம்பையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசின் சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, காலி மனை இடத்திற்கு வரி உயர்வு, கடைவரி உயர்வு, மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு, உள்ளிட்டவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், முன்னால் மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், ஜம்பை பேரூர் செயலாளர் சரவணன், தொட்டிபாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், வரத நல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிவபெருமாள், மயிலம் பாடி வாத்தியார் குப்புசாமி, ஜம்பை பேரூராட்சி அவை தலைவர் பெருமாள், வார்டு செயலாளர் செல்லவேல் மற்றும் பவானி நகர செயலாளர் சீனிவாசன் உட்பட அதிமுக ஒன்றிய கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
