BREAKING NEWS

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து செங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல்-டீசல்,சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத,வேலையின்மையை போக்காத,வெறுப்பு அரசியலை முன் எடுக்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு சார்பில் ஒன்றிய செயலாளர் இரா.முகில் தலைமையில் செங்கிப்பட்டியில் திங்கள் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் இரா.இராமச்சந்திரன்,டி.கண்ணகி,ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன்,நிர்வாகிகள் ஆர்.சதீஸ்குமார்,எஸ்.கார்த்திக்,எம்.சம்சுதீன்,எ.இப்ராகிம்,ஆர்.பாரதி,ஜி.தங்கமணி,கோவி.பெரியசாமி,எம்.அய்யாராசு உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )