BREAKING NEWS

விலைவாசி உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

விலைவாசி உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அதிமுக ஒன்றியதின் சார்பில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

இதில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர் கேடு என்கின்ற வாசகங்களை அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி அரசு உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திருப்பப்பெற வலியுறுத்தி வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

நிகழ்ச்சியில் செம்பனார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கண்ணன், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணசாமி, மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார், மயிலாடுதுறை மாவட்ட எம்ஜிஆர் மன்ற கழக செயலாளர் நாஞ்சில் கார்த்தி, மயிலாடுதுறை மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் எம்.ஆர்.எஸ்.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் கபடி.பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )