வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் புதிதாக இந்தியன் வங்கி அமையவுள்ள இடத்தினை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உடன் இந்தியன் வங்கி ஜெனரல் மேனேஜர் கணேஷ்ராம், மண்டல அலுவலர் ஜெயபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளி பாண்டியன், மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ராமசுப்பு, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ஒன்றிய கவுன்சிலர் கிருபாகரன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், வில்லிசேரி கிளைச் செயலாளர் அய்யனார், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, முருகன், கோபி, பழனிகுமார், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.