விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளி மாணவரிடம் ஜாதி உணர்வை தூண்டும் வகையில் பேசிய உதவி தலைமை ஆசிரியை- சமூக வலைதளங்களில் பரவி சர்சை ஏற்படுத்தி ஆடியோ விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் அதே பள்ளியை சேர்ந்த உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மீனா இருவரும் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
CATEGORIES தூத்துக்குடி