விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு- தனியார் நிறுவனங்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரி பகுதியைச் சேர்ந்த கவிதா மகேஸ்வரி முருகேசன் அனிதா உள்ளிட்டோர்க்கு எட்டயபுரம் கோவில்பட்டி செல்லக்கூடிய சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தில் 35 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் விளைநிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைப்பதற்காக தனியார் நிறுவனங்கள் விளை நிலங்களை கையகப்படுத்தி மின் கோபுரம் அமைத்து வருகிறது இந்நிலையில் அவர்களது விளைநிலங்கள் வழியாக தனியார் நிறுவனம் மின்கோபுரம் வயர்கள்அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு காவல்துறை உடந்தையாக இருப்பதாக கோரி கோஷங்கள் எழுப்பி பின்னர் தங்களது மனுவை கோட்டாட்சியரிடம் அளித்தனர் .. மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
