விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி சிக்னேச்சர் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் முன்னிலை வகித்தார். அருகில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சி.சமயமூர்த்தி முதன்மைச் செயலாளர்/ ஆணையர் சி.விஜயராஜ்குமார் (சர்க்கரைத்துறை) வேளாண்மை | உழவர்நலத்துறை இயக்குநர்.ஆ.அண்ணாதுரை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் முனைவர்.எஸ்.நடராஜன்,
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார்,
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகரன், வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா.முருகேசன், ‘விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றுத் துறை இணை இயக்குநர் கே. ஜெயசெல்வின்இன்பராஜ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணை இயக்குநர் சி.இராமபிரசாத், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர்,
மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், வேளாண்மை துறை துணை இயக்குனர் ஜே.சேகர் மாநில அட்மா திட்டக்குழு உறுப்பினர் ஜெ.லிங்கராஜன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.