விவசாய நிலங்களை அழித்துவிட்டு புறவழிச் சாலை அமைப்பதை கை விட கோரி விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து சங்கு ஊதி கொண்டு வந்த தீர்மானத்தை கீழ திருப்பந்துருத்தி ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் நகர சபை மற்றும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பத்துருத்தி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி விவசாயிகள் கருப்பு பேட்ச் அணிந்தும் சங்கு ஊதியும் நூதன முறையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்தனர்.
விவசாய நிலங்களை அழித்துவிட்டு புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி ஏற்கனவே இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதற்கு ஆக்கிரமிப்புகள் தான் காரணம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையை விரிவு படுத்தாமல் விவசாய நிலங்களை அழிப்பதை ஏற்க முடியாது என விவசாயிகள் அப்போது தெரிவித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்கீழத்திருப்பத்துருத்தி கிராம சபை கூட்டம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்விவசாயிகள் கருப்பு பேட்ச் அணிந்தும் சங்கு ஊதி கிராம சபை கூட்டம்