வீடியோ எடுத்து மிரட்டி வந்த ஊராட்சி மன்ற தலைவர் மகன் கைது!
வீடியோ எடுத்து மிரட்டி வந்த ஊராட்சி மன்ற தலைவர் மகன் கைது!
நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள அக்கா வீட்டிற்கு வெங்கடேஷ் என்ற வாலிபர் விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். இவரின் தந்தை முருகேசன் இளையநயினார் குளத்தைச் சேர்ந்தவர். மேலும் அவர் சவுந்திரபாண்டிபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.
வெங்கடேஷ் ஐடிஐ படித்து விட்டு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உவரியில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றிருந்த வெங்கடேஷின் பார்வை அவரின் பக்கத்து வீட்டின் மீது பாய்ந்தது.
பக்கத்து வீட்டில் பிளஸ் 1 படித்து வரும் மாணவியை பார்த்த வெங்கடேஷன், அவருடன் நட்பாக பழகி, பின்னர் மாணவிக்கு தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். அதன் பின்னர், வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, வெளியில் சொல்ல முடியாதபடிக்கு மாணவியை தொடர்ந்து மிரட்டி, பாலியல் தொல்லைகளைத் தொடரவும் செய்துள்ளார்.
இதனால் பயந்து போன பிளஸ்1 மாணவி தனது பெற்றோரிடம் வெங்கடேஷ் கொடுத்த பாலியல் தொல்லைகள் குறித்து சொல்லாமல் மறைத்துள்ளார். திடிரென மகள் சுருண்டு, சுருண்டு படுத்துக் கொள்வதையும், சோர்வாக இருந்ததையும், வயிற்று வலியால் துடித்ததையும் கண்ட தாய், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும், மகள் 7 மாத கர்ப்பமாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மாணவியிடம் இது குறித்து விசாரித்ததில், ‘‘பக்கத்து வீட்டிற்கு விருந்தினராக வந்த வெங்கடேஷன் தான் தன் கர்ப்பத்திற்கு காரணம் என்று கூறி அழுதுள்ளார்.’’ இதனால் கொதித்தெழுந்த மாணவியின் பெற்றோர் வள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவரின் மகனான வெங்கடேசை கைது செய்துள்ளனர். மாணவியை கர்ப்பமாக்கியதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது வெங்கடேசன் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார். பிளஸ்1 மாணவி கர்ப்பம் அடைந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.