வீரப்பனின் அண்ணனும், ஆயுள் தண்டனைக் கைதியுமான மாதையன் உயிரிழப்பு!
வீரப்பனின் அண்ணனும், ஆயுள் தண்டனைக் கைதியுமான மாதையன் உயிரிழப்பு!
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாதையன் உயிரிழந்தார். அவருக்கு வயது 75.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன் போலீசாரால் கடந்த 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது அண்ணன் மாதையன், சத்தியமங்கலம் வனப்பகுதி வன அதிகாரியை கொலை செய்த வழக்கில் கடந்த 1987-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோவை மத்திய சிறைக்கும், அதன்பிறகு சேலம் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்ட இவர், கடந்த 7 ஆண்டுகளாக இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாதையன், அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார். இதனால் அவருக்கு சிறை அதிகாரிகள் பரோல் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 25 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதையன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 35 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த வீரப்பனின் சகோதரர் மாதையன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்