வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.

பழனியில் வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பழனி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜே பி சரவணன் ,ஹரிஹர முத்து, சுப்பிரமணி, கார்த்திக் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் பி.மணி, மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் காளிதாசன் மற்றும் மணிகண்டன், மாரிமுத்து மற்றும் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வீர தியாகி விஸ்வநாததாஸ், முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்க நாட்காட்டி வெளியிடப்பட்டது. முன்னதாக இதில் பேசிய பொறுப்பாளர்கள்,
முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், சலூன் கடைகளில் மின்சார கட்டணத்தில் சலுகை மற்றும் தொழில் வரி சலுகை போன்றவற்றை தமிழக அரசு செய்ய வேண்டும்.
மேலும் விசுவநாததாஸின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தனர்.