BREAKING NEWS

வெள்ளித்திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த நபர் கைது.

வெள்ளித்திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த நபர் கைது.

அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் வெள்ளித்திருப்பூர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் அரை லிட்டர் அளவுள்ள பாலித்தீன் கவரில் 8 பாக்கெட் சாராயம் மொத்தம் நான்கு லிட்டர் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் குரும்பபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த விசுவநாதன் வயது 40 என தெரியவந்தது உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விஸ்வநாதனை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )