வெள்ளி வேல், செங்கோல் திருட்டு: அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே சென்ற சி.வி.சண்முகம் அதிர்ச்சி!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்த வெள்ளி வேல் மற்றும் செங்கோல்கள் உள்ளிட்டவை திருடு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில் அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நுழைய முற்பட்டனர். அப்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர்களுக்கிடையே கலவரம் வெடித்தது.
இதனால் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருதரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.