BREAKING NEWS

வேடசந்தூர் அருகே வீடு புகுந்து முதியவரை தாக்கி 5 பவுன் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

வேடசந்தூர் அருகே வீடு புகுந்து முதியவரை தாக்கி 5 பவுன் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80) என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் நுழைந்து சண்முகத்தை தாக்கி 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்

இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் DSP.பவித்ரா மேற்பார்வையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன்மூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வேடசந்தூர் மேல்மாத்தினிபட்டியை சேர்ந்த கதிர் (எ)கருப்பசாமி (21) மற்றும் 17-வயது சிறுவர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகையை மீட்டு, செல்போன்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS