வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு. போலீசார் தொடர்ந்து விசாரணை..

வாழப்பாடி அருகே வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு,
போலீசாருக்கு தெரியாமல் முதியவரின் சடலத்தை எரித்ததால் பரபரப்பு, துப்பாக்கி சூட்டில் பலியான முதியவரின் மகன்களிடம் போலீசார் விசாரணை,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புளுதிக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய குட்டி முடுவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (வயது 60) இவருக்கு சாலா என்கிற மனைவியும் மாரப்பன், பழனிசாமி என்கிற இரண்டு மகன்களும் சத்யா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
இதனிடையே விவசாயம் செய்து வரும் பெருமாள் தனது நண்பர்களுடன் காப்புக்காடு வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாட சென்ற போது நாட்டு துப்பாக்கியால் காட்டு பன்றியை சுட்டதில் எதிர்பாராத விதமாக முதியவர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
போலீசாருக்கு தெரியாமல் சடலத்தை வனப்பகுதிஅருகில் எரித்து விட்டதாக வாழப்பாடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் டிஎஸ்பி, தலைமையிலான போலீசார், வனத்துறையினர், மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் காட்டு பன்றியை வேட்டையாட சென்ற போது தவறுதலாக பெருமாள் மீது குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த உறவினர்கள் முதியவரின் மகன்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டவரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 6 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கு வேண்டுமென பைசல் பேசி உறுதி செய்ததுடன் போலீசாருக்கு தெரியாமல் சடலத்தை வனப்பகுதி அருகே எரித்து விட்டு சென்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த பெருமாளின் இரண்டு மகன்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.