BREAKING NEWS

வேன் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதால் பரிதாபம்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (21) என்பவர் அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று (ஜூன் 17) தனது இருசக்கர வாகனத்தில், பழனி அரசு மருத்துவமனையின் பின்பக்க நுழைவாயில் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல்

மனோஜ்

அப்போது, முன்னே சென்ற ஆட்டோ ஒன்றை முந்திச் செல்ல முயன்ற மனோஜ், எதிரே வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை உடனடியாப மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மனோஜை, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )