BREAKING NEWS

வேப்பூரில் சிறு வியாபாரிகளிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை.!

வேப்பூரில் சிறு வியாபாரிகளிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை.!

 

கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஜீவா சாலையோர சிறுவியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆக்28, வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். 

 

இந்நிலையில் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் ஜீவா சாலையோர சிறு வியாபாரிகள் சங்க வியாபாரிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்காக வரும் அக்31 ஆம் தேதி மீண்டும் ஈடுபட போவதாக வியாபாரிகள்‌ அதிகாரிகளிடம் தெரிவித்து கலைந்து சென்றனர்.

 

இந்த பேச்சுவார்த்தையில் ஜீவா சாலையோர வியாபாரிகள் சார்பில் சிபிஐ மாவட்ட குழு நிர்வாகி சுப்பிரமணியன், ஜீவா சாலையோர சிறுவியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், மற்றும் வியாபாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )