வேப்பூரில் திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி 600 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வேப்பூர் கூட்டுரோட்டில் நல்லூர் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.
திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழிகாட்டுதலின் பேரில்..
நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஒன்றிய அமைப்பாளர் தங்க நாராயணசாமி தலைமையில் சேப்பாக்கம், மாளிகைமேடு,கீழக்குறிச்சி, ஆதியூர், ஐவதகுடி, நாரையூர், கொளப்பாக்கம், பெரியநெசலூர், திருப்பெயர், கொளப்பாக்கம், அடரி, பாசார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 600 மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டி, புடவை, அரிசி, இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணாங்கட்டி, தேவகி ராஜா, செந்தில்குமார், முனியன், சக்திவேல்,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரகுநாதன்,முன்னாள் கவுன்சிலர் சோலைராஜன் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் துளசி மணி, சூர்யா, சிலம்பரசன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.