வேப்பூரில் பௌத்த தம்ம சங்கம் கவிவெளி நிகழ்வு நடைபெற்றது.
செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள அன்னை தெரசா செவிலியர் பயிற்சி மையத்தில் பௌத்த தம்ம சங்கம் சார்பில் கவிவெளி நிகழ்வு நடைபெற்றது.
சித்த மருத்துவர் ராஜா பழனிவேல் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார், இந்த கவிவெளி நிகழ்வில் நாகராஜன், பௌத்த தம்ம சங்கத்தின் செயலாளரும் இந்திய குடியரசு கட்சியின் மாவட்டத் தலைவர் கதிர்வேல், வழக்கறிஞர் விடுதலைவளவன், புதுச்சேரி பௌத்த தம்ப சங்கத்தின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, மதிவதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரிசரணம் பஞ்சசீலத்தோடு மகாபோதி சொசைட்டி தலைவர் செல்வன் சாக்யா இக்கவிவெளி நிகழ்வினை வாழ்த்தி தொடங்கி வைத்தார். பௌத்த தம்ம சங்கத்தின் செயலாளரும் ஆசிரியருமான விஸ்வநாதன், உன்னால் தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் கலாமணி, பௌத்த செயல்பாட்டாளர் கேசவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் பௌத்த ஆய்வாளரும் பௌத்த தம்ம சங்கத்தின் துணைத் தலைவருமான ஜெயபிரகாஷ், தம்ம மஹாமாத்திரர் மணிகண்டன், பொதுமறை தமிழ் குடில் தலைவரும் கவிஞருமான கலியன், ஜெகசீவன்ராம், பீட்டர், அந்தோணிசாமி,
உளுந்தூர்பேட்டை தமிழ் சங்க பேராசிரியர் கவிஞர் ரவிச்சந்திரன், கவிஞர் ஆனந்தமாலை, வழக்கறிஞர் சுரேஷ்குமார், அரிகிருஷ்ணன், பௌத்த தம்ம சங்கத்தின் பொருளாளர் திருமுருகன், கவிஞரும் ஆசிரியருமான கருப்புசாமி, கவிஞர் பேராசிரியருமான ராஜேந்திரன் ஆகியோர் கவிதை வாசித்து சிறப்பித்தனர்.
இக்கவிவெளி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் பௌத்தத் தம்ம சங்கத்தின் தலைவருமான பஞ்சமுத்து கவிதை வாசித்து கவிவெளி நிகழ்வை நிறைவு செய்தார்.இந்நிகழ்வில் செல்வி ப.பு. யாழ்அரசி வரவேற்புரையாற்றினார், மொழியரசி செல்வம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார், நிறைவாக பௌத்த தம்ம சங்கத்தின் நிர்வாகி லெனின் பாரதி நன்றியுரை ஆற்றினார்.