வேப்பூர் அருகே அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்து வனப்பகுதியில் விட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தில் குரங்கு ஒன்று குடியிருப்பு நிறைந்த அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மொட்டை மாடி மேற்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குரங்குக்கு பலத்த அடிபட்டுள்ளது.
இதனால் அந்த குரங்கு எழுந்து செல்ல முடியாமல் இரு நாட்களாக பகுதியிலேயே கேட்பாரற்று கிடந்துள்ளது இதனை பார்த்த பொதுமக்கள் செய்வதறியாமல் குரங்கிற்கு உணவு தண்ணீர் போன்றவற்றை கொடுத்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அப்பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற செய்தியாளர் அக்குரங்கின் நிலையைக் கண்டு வேதனை அடைந்தார் பின்னர் அவர் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற வனவர் பன்னீர்செல்வம் அக்குரங்கை பத்திரமாக மீட்டு வேப்பூருக்கு அழைத்துச் சென்று அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு கால்நடை மருத்துவர் மூலம் முதல் உதவி செய்து, பின்னர் காட்டுமையிலூர், பெரியநெசலூர் காப்புக்காடு பகுதியில் விட்டனர்.