வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் -நகர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றில் அக்கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி குமாரி (வயது 33) இன்று அங்குள்ள மணிமுத்தாறு தரைப்பாலத்தில் துணி துவைத்து கொண்டிருந்த பொழுது…
தரை பாலத்தில் இருந்து தவறி குமாரி கீழே விழுந்துள்ளார் அங்குள்ள மதகில் மாட்டிக்கொண்டு மூச்சு திணறல் ஏற்பட்டு கிடந்தவரை, அங்கிருந்தவர்கள் பார்த்து அவரை தூக்கி வந்து கரையின் மேலே பார்க்கும் பொழுது குமாரி உயிரிழந்து இருந்துள்ளார்.
இது குறித்து, வேப்பூர் போலீசாருக்கு அக்கிராமத்தினர் தகவல் அளித்ததின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த குமாரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதோடு அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.