வேப்பூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்
திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில் கிளைச் செயலாளர் தண்டபாணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். பின்னர் திமுக நிர்வாகிகள், ஜெயபால், எஸ் ஆர் ஆனந்தன், செல்வராசு, காந்தி ஆகியோர் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவத்தை இளைஞர்களுக்கு வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில் முன்னாள் கிளைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.