வேப்பூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் சரமாரி தாக்குதல்.! போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ.மருர் கிராமத்தில் அரசின் எந்தவித முன் அனுமதி இன்றி கள்ளத்தனமாக சிலர் கிராவல் மற்றும் ஆற்று மணல் அள்ளுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அப்பகுதியில் கிராவல் மற்றும் மணல் அள்ளியவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகர் தான் புகார் கொடுத்திருப்பார் என்று அவரை அதே ஊரைச் சேர்ந்த மணல் கொள்ளையர்கள் சிலர் சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலாமதி மற்றும் அவரது உறவினர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் நீலாமதி, அவரது கணவர் சேகர் மற்றும் அவரது உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.