BREAKING NEWS

வேப்பூர் அருகே கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.

வேப்பூர் அருகே கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ சித்தூர் ஆரூரன் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வழங்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 

இது தொடர்பாக வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் சி. பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.

 

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு அறிவித்தார்

 

 

இதனால் வேப்பூர் பகுதியில் பதற்றம் நிலவியதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர் இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் வேப்பூரில் இருந்து சித்தூர் ஆரூரன் சர்க்கரை ஆலை வரை விவசாயிகள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 

 

அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

 

 

அப்போது விவசாயிகள் ஜனநாயக முறைப்படி போராடிய எங்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததை கண்டித்து தர்னாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )