வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்காயி வயது 65, தனது சகோதரி கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரோடு வசித்து வந்தார். செல்லம்மாளுக்கு பாலு செல்லமுத்து ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது தனது வீடு எரிவதாக தகவல் கிடைத்தது அதன் பேரில் ஓடி சென்று பார்த்தபோது தனது கூரை வீடு தீயில் எரிந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வேப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ சென்று கொழுந்து விட்டு எறிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் உடமைகள், குடும்ப அட்டை ஆதார் அட்டை ரேஷன் அட்டை போன்றவை எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.