BREAKING NEWS

வேப்பூர் அருகே டாஸ்மாக் பாரில் ஜோராக நடைபெறும் மது விற்பனை.

வேப்பூர் அருகே டாஸ்மாக் பாரில் ஜோராக நடைபெறும் மது விற்பனை.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் லேனா திருமண மண்டபத்திற்கு பின்புறம் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது அதன் அருகில் அரசு அங்கீகாரம் பெற்ற பார் இயங்குகிறது.

 

இங்கு 24 மணி நேரமும் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. குறிப்பாக டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் குவாட்டர் 200 ரூபாய் முதல் 250 வரை விற்பனை செய்கின்றனர். 

 

இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையாக இருநூறு ரூபாய்க்கு குவாட்டர் வாங்கும் மது பிரியர்களுக்கு முட்டை வறுவல், முட்டை, பலகாரம், கொய்யா பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்கின்றனர்.

 

அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் இது போன்ற பார்களுக்கு கடிவாளம் போடுமா.?

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )