வேப்பூர் அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா ; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கடலூர் மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் மாவட்ட செயலாளரான சிவெ கணேசன் வழிகாட்டுதலோடு மாநில செயற்குழு உறுப்பினர் நல்லூர் ஒன்றிய செயலாளர் ஆத்மா குழு உறுப்பினர் பாவாடை கோவிந்தசாமி ஆலோசனைப்படி,
மேனாள் கவுன்சிலர் ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய பொறியாளர் அணி செந்தில்குமார், மாணவர் அணி மாரிமுத்து ஆகியோர் தலைமையில் கழகக் கொடியேற்றி பேருந்தில் பயணிக்கும் பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
அப்போது, கிளைச் செயலாளர் தண்டபாணி, எல்ஐசி ஜெயபால், எஸ்ஆர் ஆனந்தன், செல்வராசு காந்தி அவைத்தலைவர் ராஜா மணி, இருசமுத்து, பிரபாகரன், மதியழகன், ஞானசேகர், பொன் பாலு, ஆலக்கீரை பழனிவேல், என்எல்சி சுப்பிரமணியன், இளைஞர் அணி விக்னேஷ், ரஞ்சித்குமார், சவுத்ரி, மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.