வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்தது.! தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உளுந்தூர்பேட்டையில் இருந்து மணப்பாறைக்கு மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சரத்குமார் 27, என்பவர் TN 61 B 4689 என்ற பதிவெண் கொண்ட லாரியை நெல் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு வேப்பூர் சர்வீஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வந்து கொண்டிருக்கும் பொழுது நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென தீப்பிடித்து.
இதில் லாரியின் எஞ்சின் பகுதி எரிந்தது, தகவல் அறிந்து உடனே சம்பவ இடம் வந்த வேப்பூர் போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 10 நிமிடத்தில் தீயை அனைத்தனர், விபத்தில் லாரியின் என்ஜின் பகுதி முழுவதும் எரிந்தது. ஓட்டுநர் சரத்குமாருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் லாரியை அப்புறப்படுத்தி வேப்பூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.