BREAKING NEWS

வேப்பூர் வாரச்சந்தைக்கு அடிப்படை வசதி செய்து தர வியாபாரிகள் கோரிக்கை!

வேப்பூர் வாரச்சந்தைக்கு அடிப்படை வசதி செய்து தர வியாபாரிகள் கோரிக்கை!

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ளது வாரச்சந்தை, இந்த சந்தை வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஆட்டு சந்தையும் மாலை காய்கறிச் சந்தையும் ஊராட்சி மன்றம் சார்பாக நடத்தப்படுகிறது.

 

இங்கு நடைபெறும் ஆட்டுச் சந்தையில் விசேஷ விழா காலங்களில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறுகின்றது, அதேபோல் காய்கறி சந்தையிலும் பல மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

 

சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாரம் ஒரு முறை மொத்தமாக இந்த சந்தையில் வாங்கி செல்கின்றனர்.

 

இங்கு வியாபாரத்துக்கு வரும் வியாபாரிகளிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்க டெண்டர் விடப்பட்டு சுங்க கட்டணமும் வசூல் செய்து வருகின்றனர்,

 

ஆனால் இங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் செய்து தராமல் இருப்பதால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

குறிப்பாக இந்த வார சந்தையில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறை பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து போகும் அவல நிலையில் உள்ளது, குடிநீருக்கு அமைக்கப்பட்ட மினி டேங்க் செயல்படாமல் காட்சிப் பொருளாக இருக்கின்றது,

 

சிறுமழைக்கே ஏரி நீர் போல தண்ணீர் தேங்குவதால் காய்கறி விற்பனை பெரிதும் பாதிக்கப்படுகிறது, சேரும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்களும் சந்தைக்கு வர தயங்குகின்றனர்,

 

அதேபோல் சந்தை வளாகம் முழுவதும் முட்புதர்கள் நிறைந்து கிடப்பதால் பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது என விவசாயிகள் கவலையோடு வேதனை தெரிவிக்கின்றனர்.

 

எனவே இது போன்ற அடிப்படை வசதிகளை செய்தி தரவும் சேரும் சகதியுமாக இருக்கும் வாரச்சந்தையில் கிராவல், பெராட்சி போன்றவைகளை கொட்டி சரிவர பராமரிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )